×

மாவட்ட ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள் கூட்டம்: 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

 

தேனி, நவ. 29: தேனி மாவட்ட ஊராட்சி மன்ற சாதாரண கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேனி மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சி மன்ற கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் ப்ரீதாநடேஷ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், 27 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இதனையடுத்து நடந்த விவாதத்தின்போது, மாவட்ட திட்டக்குழுக் கூட்டமானது கடந்த 8 மாதமாக நடக்காததால் மாவட்ட ஊராட்சிக்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் பாதிப்புள்ளது. எனவே, விரைந்து மாவட்ட திட்டக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். கனிம வளத்துறை அலுவலக உதவி இயக்குநராக உள்ள அதிகாரி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளது. எனவே, இவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்த வேண்டும் என மாவட்ட துணை தலைவர் ராஜபாண்டியன் பேசினார்.

The post மாவட்ட ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள் கூட்டம்: 27 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : District Panchayat ,Councilors ,Theni ,Theni District Panchayat Council ,panchayat ,Theni district panchayat ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்