×

வடமதுரை அருகே குளத்தில் மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

 

வடமதுரை, நவ. 29: வடமதுரை அருகே செங்குறிச்சி பூசாரிபட்டி களம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி (27). இவர் நேற்று முன்தினம் செங்குறிச்சி மந்தை குளத்தில் மீன் பிடிக்க சென்றார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குளத்திற்குள் தவறி விழுந்த அழகர்சாமி தண்ணீரில் மூழ்கி பலியானார்.

அந்த வழியே சென்றவர்கள் இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகர்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்ய திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வடமதுரை அருகே குளத்தில் மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,North Madurai ,Alagarswamy ,Sengurichi Pusaripatti Kalam ,Sengurichchi Mantha Pond ,
× RELATED வடமதுரை அருகே ஊழியர்களின் பணம் திருட்டு: வடமாநில வாலிபர் கைது