×

தோழி வீட்டில் தகராறு சரமாரி தாக்கியதில் டிரைவர் மர்மச்சாவு ஆத்தூரில் பரபரப்பு

ஆத்தூர், நவ.29: ஆத்தூரில் தோழி வீட்டிற்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில், சரமாரி தாக்கியதில் டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் அரசநத்தம் கோவிந்தராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துபிரபு(27). லாரி டிரைவரான இவருக்கும், ஆத்தூர் காட்டுக்கோட்டை பகுதியில் கணவரை பிரிந்து வாழும் திவ்யா(26) என்பவருக்கும், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டது. தொடர்ந்து பழகி வந்துள்ளனர். நேற்று முன்தினம் திவ்யா வீட்டிற்கு சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முத்துபிரபு வற்புறுத்தியதாக தெரிகிறது. அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். தொடர்ந்து நேற்றிரவு 7 மணியளவில், மீண்டும் திவ்யா வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார் அப்போது, தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

அப்போது, அங்கிருந்த திவ்யாவின் அக்கா கணவர் மணியரசன்(28) என்பவர், முத்துபிரபுவை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து கைகலப்பு ஏற்பட்டதில் முத்துபிரபு படுகாயமடைந்தார். அக்கம்- பக்கத்தினர் அவரை சமரசப்படுத்தினர். படுகாயமடைந்த முத்துபிரபுவை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, முத்துபிரவு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து ஆத்தூர் போலீசார் விரைந்து சென்று முத்துபிரபு சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தோழி வீட்டில் தகராறு சரமாரி தாக்கியதில் டிரைவர் மர்மச்சாவு ஆத்தூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Marmachau ,Athur ,Salem District ,Aathur Union ,Arasanattam ,Govindarajapalayam ,Aathur ,
× RELATED அமித்ஷா பற்றி ஜெயக்குமார் கூறியதுதான் என் நிலைப்பாடு: எடப்பாடி நழுவல்