×
Saravana Stores

வடகிழக்கு பருவ மழை எதிர்கொள்ள ஆயத்த பணி

தஞ்சாவூர், நவ. 29: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் உக்கடை ஊராட்சியில் பருவமழை ஆயத்தப் பணிகள், வயல்களில் மழைநீர் நிரம்பியுள்ளதை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் , உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரவிந்த், மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். வேளாண்மை-உழவர் நலத்துறை தெரிவித்ததாவது. மாநில அளவில் 13,749 ஹெக்டர் அளவில் மழைநீர் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 974 ஹெக்டர் மழைநீரால் மூழ்கியுள்ளன.

வாய்க்கால்கள் தூர்வார ஆவன செய்யப்படும். பயிர்கள் 33% பாதிப்பு ஏற்படின் இழப்பீடு தொகை கிடைக்க ஆவன செய்யப்படும் என்றார். பின்னர் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கீழையூர் நன்னான்குளத்தில் நீர் நிரம்பியுள்ளதையும், குளத்தில் வடிகால் அமைத்து வயல்களுக்கு செல்லாமல் தண்ணீரை துரிதமாக வெளியேற்றப்படுவதை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மதுக்கூர் ஒன்றியம் பட்டுக்கோட்டை வட்டம், கண்ணனாற்றின் பழைய பாலத்தில் நீர்வரத்து குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ராஜாமடம் பல்நோக்கு பேரிடர் மைய கட்டடத்தில் புயல் பாதுகாப்பு மையத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் தயார்நிலையில் இருப்பதை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), அசோக்குமார் (பேராவூரணி), உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா (தஞ்சாவூர்), ஜெய (பட்டுக்கோட்டை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயசீலன், வேளாண்மை இணை இயக்குநர் வித்யா , நீர்வளத்துறை செயற்பொறியாளர் அய்யம்பெருமாள், வட்டாட்சியர் பாக்யராஜ், பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கென்னடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post வடகிழக்கு பருவ மழை எதிர்கொள்ள ஆயத்த பணி appeared first on Dinakaran.

Tags : North East ,Thanjavur ,Minister of Agriculture and Farmers' Welfare ,MRK Panneerselvam ,Minister of Higher Education ,Kovi Sezhiyan ,Ukkadai Panchayat ,Ammapeti Union ,Thanjavur District ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளங்களில் பள்ளி, கல்லூரி...