×

5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: ஐ.டி. ஊழியர் கைது

புழல்: திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர் 28 வயது பெண். இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களது 5 வயது மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் யுகேஜி படித்து வருகிறாள். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரது தாய், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, குழந்தை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தையிடம் தாய் மற்றும் மருத்துவர்கள் விசாரித்ததில் குழந்தையின் தந்தை குழந்தைக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.

இதுபற்றி குழந்தையின் தாய், செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் செண்பகதேவி தலைமையிலான போலீசார் நேற்று காலை ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் குழந்தையின் தந்தையை கைது செய்தார். பிறகு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: ஐ.டி. ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Worm ,Tiruvika Nagar ,Dinakaran ,
× RELATED புழல் மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது