×

என்.ஐ., கலை அறிவியல் கல்லூரியில் போலீஸ் அக்கா நியமனம்

தக்கலை, நவ. 29: குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு போலீஸ் அக்கா நியமன நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் இரா.மாரிமுத்து தலைமை வகித்தார். தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இம்மானுவேல் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தக்கலை காவல் நிலைய காவலர் ஜிஜினி கல்லூரி போலீஸ் அக்காவாக நியமிக்கப்பட்டார். கல்லூரி தலைவர் எம். எஸ். பைசல்கான், கல்லூரி தாளாளர் ஏ.பி மஜீத்கான், நூருல் இஸ்லாம் உயர்கல்வி மைய இணை துணை வேந்தர் (நிர்வாகம்) கே.ஏ ஜனார்த்தனன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

The post என்.ஐ., கலை அறிவியல் கல்லூரியில் போலீஸ் அக்கா நியமனம் appeared first on Dinakaran.

Tags : N.I. ,College of Arts and Sciences ,Takkalai ,Noorul Islam College of Arts and Sciences ,Kumarakom ,Chief Minister ,I. Marimuthu ,Assistant Inspector ,Emmanuel ,Takkalai Police Station ,
× RELATED அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும்...