- ஆர்டிஓ
- கடுகூர்
- கடூர்
- அரூர் கோட்டாட்சியர்
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
- அரூர் கோட்டாட்சியர் சின்னுசாமி
- கடூர் அரசு மருத்துவமனை
கடத்தூர், நவ.29: கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் 3 புளிய மரங்களை அகற்ற, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அரூர் கோட்டாட்சியருக்கு மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று, அரூர் கோட்டாட்சியர் சின்னுசாமி, கடத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள 3 புளிய மரங்கள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் வள்ளி, கடத்தூர் வருவாய் ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
The post கடத்தூரில் மரங்களை அகற்ற ஆர்டிஓ ஆய்வு appeared first on Dinakaran.