×
Saravana Stores

வள்ளுவர் கோட்டத்தில் புனரமைப்பு பணிகள் 75 சதவீதம் நிறைவு: இதர பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

சென்னை:வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்கும் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார். வள்ளுவர் கோட்டம் முந்தைய ஆட்சியாளர்களால், பராமரிக்கப்படாததால், சிதிலடைந்து, பொலிவை இழந்து மோசமான நிலையில் இருந்தது. இதனால் வள்ளுவர் கோட்டத்தை ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புனரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. இந்த பணிகளை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு வள்ளுவர் கோட்டப் புனரமைக்கும் அனைத்து பணிகளையும் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தார்.

தற்போது நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளான, கலையரங்கம், குறள்மணி மாட கூரை புனரமைப்பு, தரைகள் புதுப்பித்தல், குறள் மணிமாட ஓவியம் சீரமைத்தல், வளாக சுற்றுச் சுவர் புதுப்பித்தல், தூண்கள், நுழைவாயில் பகுதிகளில் சிற்ப வேலைபாடுகள், மாற்றுத் திறனாளிகள் நடைபாதை, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தேயக மின் தூக்கி , பலநிலை வாகன நிறுத்துமிடம், உணவுக்கூடம், விற்பனை மையம், மழைநீர் வடிகால் வசதி, 2 லட்சம் கொள்ளளவு நீர் சேமிப்பு தொட்டி அமைத்தல், பேவர் பிளாக் பாதை அமைத்தல், ஆர்ஓ பிளான்ட் அமைத்தல், புல்வெளி அமைத்தல், செயற்கை நீரூற்று அமைத்தல், ஒளி ஒலி காட்சி அமைத்தல், சிதிலமைடைந்த மின்சாதனங்கள், மின் இணைப்புகள் மாற்றுதல், கூட்ட அரங்கம் மற்றும் குறள்மணி மாடத்தில் குளிர்சாதன வசதி, தீ தடுப்பு வசதிகள், ஒலிபெருக்கி அமைப்பு நிறுவுதல், நுழைவாயில் புதுப்பித்தல் பணி, உயர் அழுத்த மின் வசதி, 250 கே.வி.ஏ. ஜெனரெட்டர், சிசிடிவி பொருத்துதல் ஆகியவற்றின் பணி முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: தோரணவாயில் முகப்பில், அழகு மிளிரச் செய்யும் ஸ்தபதிகளின் பணிகளை பார்வையிட்டு, துரிதமாக முடிக்க வேண்டும். மின் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. கலையரங்கம், குறள் மணிமண்டபம், தோரணவாயில் கட்டடங்களில் நடைபெற்று வரும் மின் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். பல்லடுக்கு வாகன நிறுத்துமிட கூரை கான்கிரீட் போடப்பட்டுள்ளது, கலையரங்கத்தில் பால்ஸ் சீலிங் பணி மற்றும் வால்பேனலிங் பணிகள் நடைபெற்று. இதுவரை மொத்தமாக 75 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டது. பொது மக்கள், பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது, செயலாளர் மங்கத் ராம் சர்மா, பொதுப்பணித்துறை சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் மணிவண்ணன், சிறப்பு பணி அலுவலர் விஸ்வநாத், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வள்ளுவர் கோட்டத்தில் புனரமைப்பு பணிகள் 75 சதவீதம் நிறைவு: இதர பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Valluvar ,Division ,Minister AV Velu ,CHENNAI ,Valluvar Sector ,Public Works Department ,Valluvar Kottam ,Dinakaran ,
× RELATED வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு!