×

புரோ கபடி உபி யோதாஸ் வெற்றி

நொய்டா: 11வது புரோ கபடி லீக் க்கின் 81 வது போட்டி நேற்று நொய்டா உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் உபி யோதாஸ் அணியும் ஜெய்பூர் பிங் பேந்தர்ஸ் அணியும் மோதின. தொடக்கம் முதலே ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தாலும் யுபி அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் அதற்கு சளைக்காமல் ஜெய்பூர் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் பாதி நேர முடிவில் ஜெய்பூர் அணி 20 புள்ளிகளும் யுபி அணி 19 புள்ளிகளும் பெற்றிருந்தன. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் மோதின. கடைசியில் 33-29 என்ற புள்ளி கணக்கில் உபி யோதாஸ் அணி வெற்றி பெற்றது. உபி யோதாஸ் 15 ரெய்டு புள்ளிகளும், ஜெய்ப்பூர் அணியினர் 12 ரெய்டு புள்ளிகளும் எடுத்திருந்தனர். உபி அணியினர் 14 டேக்கிள் புள்ளிகளும் ஜெய்ப்பூர் அணியினர் 13 புள்ளிகளும் பெற்றனர். இரண்டு அணிகளுக்கும் தலா 2 ஆல் அவுட் புள்ளிகளும், தலா 2 எக்ஸ்டரா புள்ளிகளும் கிடைத்தன.

The post புரோ கபடி உபி யோதாஸ் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Pro Kabaddi UP Yodas ,Noida ,11th Pro Kabaddi League ,Noida Indoor Stadium ,UP Yodas ,Jaipur Pink Panthers ,UP ,Dinakaran ,
× RELATED டெல்லி-நொய்டா சாலையில் சுங்கம் வசூலிக்க உச்சநீதிமன்றம் தடை..!!