×

அதானி லஞ்ச விவகாரத்தில் என் பெயரை அமெரிக்க கோர்ட் குறிப்பிடவே இல்லை: ஜெகன்மோகன் பேட்டி

திருமலை: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தாடேப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: மாநில முதல்வராக பல தொழிலதிபர்களை மாநிலத்திற்கு அழைத்து வந்து தொழில் முதலீட்டை பெற எந்தவொரு அரசும் முயற்சி மேற்கொள்ளும். அவ்வாறு கடந்த ஐந்தாண்டுகளில் அதானியை பலமுறை சந்தித்துள்ளேன். எனது ஆட்சியில் அதானி குழுமத்தின் மூலம் சோலார் மின் உற்பத்தி செய்து, ஒப்பந்தம் மூலமாக மாநில அரசின் வருவாயை அதிகப்படுத்தியுள்ளோம். ஆனால், அமெரிக்க கோர்ட் விசாரிக்கும் அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டு வழக்கில் எனது பெயர் எங்கும் இல்லை என்றார்.

The post அதானி லஞ்ச விவகாரத்தில் என் பெயரை அமெரிக்க கோர்ட் குறிப்பிடவே இல்லை: ஜெகன்மோகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : US ,Jaganmohan ,Tirumala ,Dadepally, Guntur District, Andhra Pradesh ,Chief Minister Y.S.R. ,Congress ,Jaganmohan Reddy ,chief minister ,
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...