×

பேஸ்புக் நிறுவனருக்கு விருந்து அளித்தார் டிரம்ப்

போர்ட் லாடர்டேல்: அமெரிக்காவில் கடந்த 2021ல் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தார். அவரது தோல்வியை ஏற்று கொள்ள முடியாத டிரம்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தை தொடர்ந்து டிரம்பின் பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் கணக்குகள் மெட்டா நிறுவனம் முடக்கியது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அவரது கணக்குகள் மீதான தடை நீக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் 2வது முறையாக அதிபராக பதவியேற்க உள்ளார்.இந்த நிலையில்,மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் டிரம்ப்பை புளோரிடாவில் சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு டிரம்ப் விருந்து கொடுத்துள்ளார்.

The post பேஸ்புக் நிறுவனருக்கு விருந்து அளித்தார் டிரம்ப் appeared first on Dinakaran.

Tags : Trump ,Facebook ,Port Lauderdale ,2021 presidential election ,United States ,Instagram ,Meta ,Dinakaran ,
× RELATED தொழிலதிபர் எலான் மஸ்க் அமெரிக்க...