×
Saravana Stores

ஐபிஎல் வீரர்கள் ஏல சூதாட்டம்: வாலிபர் கைது

தர்மபுரி: தர்மபுரியில், ஐபிஎல் வீரர்கள் ஏல சூதாட்டம் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். ஐபிஎல் டி.20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் கடந்த 24, 25ம் தேதிகளில் சவுதி அரேபியாவில் நடந்தது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தை வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தை வைத்து சூதாட்டம் நடப்பது தெரியவந்தது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட காரிமங்கலம் சந்தைதெருவைச் சேர்ந்த ஹரிபிரசாத் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வருவதும், செல்போனில் ஐபிஎல் ஏல பெட்டிங் சூதாட்டத்தை பல்வேறு நபர்களிடம் நடத்தி கமிஷன் பெற்று வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார், தர்மபுரி சைபர் கிரைம் போலீசில் ஹரிபிரசாத்தை ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ஐபிஎல் வீரர்கள் ஏல சூதாட்டம்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : IPL ,Dharmapuri ,IPL T20 ,SAUDI ARABIA ,Dharmapuri district ,Karimangalam ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் மெகா ஏலம்: விலை போகாமல் போன முக்கிய வீரர்கள்!