×

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை: சிறப்பு மலை ரயில் சேவை

சென்னை: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி சிறப்பு மலை ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம்- உதகை, உதகை-குன்னூர், கேத்தி-உதகை இடையே சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும். டிசம்பர் .28 -முதல் ஜனவரி .2 வரை 6 நாட்களுக்கு குன்னூர் உதகை இடையே காலை, மதிய நேரத்தில் மலை ரயில் சேவை. டிசம்பர் .25, 27, 29, 31-ம் தேதிகளில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் சேவை. டிசம்பர் .26, 28, 30, ஜனவரி .1-ல் காலை 11.25 மணிக்கு உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

The post கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை: சிறப்பு மலை ரயில் சேவை appeared first on Dinakaran.

Tags : Christmas ,Year ,Special Mountain ,CHENNAI ,New Year ,Mettupalayam-Udkai ,Udkai ,Coonoor ,Kethi-Udkai ,Coonoor Utagai… ,Special Mountain Train ,Dinakaran ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கோலாகல...