×

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகி வரும் டென்மார்க்: விழாக்கோலம் பூண்டது கோபன்ஹேகன் டிவோலி பூங்கா

கோபன்ஹேகன்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டென்மார்கில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்கா விழாக்கோலம் பூண்டுள்ளது. டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட பல்வேறு நாடுகள் தயாராகி வருகின்றன. டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள பிரபலமான பொழுதுபோக்கு பூங்காவான டிவோலி கார்டன்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திருவிழா கோலம் பூண்டுள்ளது. ஆயிரக்கணக்கான மின் விளக்குகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளதால் பூங்கா வளாகம் முழுவதும் ஒளி வண்ணத்தில் மிளிர்கிறது.

குடும்பம் குடும்பமாக டிவோலி பொழுதுபோக்கு பூங்காவுக்கு வரும் மக்கள் ராட்சத ராட்டினம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட சவரிகளில் பயணித்து மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகின்றனர். பனி சறுக்கு சாகச விரும்பிகளுக்காக பூங்காவில் ஒரு செயற்கை பனிச்சறுக்கு தளம் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா இல்லம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தொடங்கப்பட்டுள்ள சிறப்பு சந்தையில் இருந்து ஏராளமானோர் பண்டிகை கால பொருட்களை ஆர்வத்துடன் வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர்.

The post கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகி வரும் டென்மார்க்: விழாக்கோலம் பூண்டது கோபன்ஹேகன் டிவோலி பூங்கா appeared first on Dinakaran.

Tags : Denmark ,Christmas ,Copenhagen Tivoli Park ,Copenhagen ,Tivoli ,
× RELATED நாடு முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!!