×

அரியலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரியலூரில், நவ.28: அரியலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தங்களது பணிகளை புறக்கணித்து, நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றத்தை அரசானையினை உடனே வெளியிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை கலைய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்துக்கு அச்சங்கத்தின் அரியலூர் மாவட்டத் தலைவர் பாக்கியம் விக்டோரியா தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சரவணன், செயலர் செந்தில்குமார், இணைச் செயலர் ரமேஷ், மத்திய செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டம் இன்றும்(27ம் தேதி) தொடர்கிறது.

The post அரியலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Revenue Officers Association ,Ariyalur Collectorate ,Ariyalur ,Tamil Nadu Revenue Officers' Union ,Ariyalur Collector's Office ,
× RELATED காத்திருப்பு போராட்டத்தால் அலுவலக பணி பாதிப்பு