- Kadavur
- பிராந்திய அலுவலகம்
- வருவாய் ஊராட்சி ஒன்றிய
- கடவூர் மாவட்ட அலுவலகம்
- தர்கம்பட்டி
- தமிழ்நாடு
- தாரகம்பட்டி, கரூர் மாவட்டம்
- தின மலர்
கடவூர், நவ. 28: தரகம்பட்டியில் கடவூர் வட்டாட்சியர் அலுவலம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி 2வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் உள்ள கடவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் கரூர் புறநகர் மாவட்ட துணை செயலாளர் முத்தமிழன் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.
இதில் இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர்மாற்ற விதித்திருத்த அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி பேசினர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post கடவூர் வட்டாட்சியர் அலுவலத்தில் 2 வது நாளாக வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.