×
Saravana Stores

சோலைமலை முருகன் கோயிலில் அறுபடை வீடு ஆன்மிக பயணம்

மதுரை, நவ. 28: அழகர்கோவிலில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில், அறுபடை வீடு ஆன்மிக குழுவினர் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் அறநிலையத்துறையின் நிதி உதவியின் கீழ், அறுபடை முருகன் கோயில்களுக்கு, மூத்த குடிமக்களை கட்டணமின்றி ஆன்மிக சுற்றுப் பயணம் அழைத்து செல்லப்படுகிறது. அந்த வகையில் நேற்று அறுபடை வீடுகளுக்கான ஆன்மிக பயண குழுவினர் 240 பேர், அழகர்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலுக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோயில் சார்பில் அவர்களுக்கு சிறப்பு தரிசனம் அனுமதிக்கப்பட்டு, அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கண்காணிப்பாளர் அருள்செல்வன், மேலாளர் தேவராஜ் ஆகியோர் பக்தர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கி சிறப்பித்தனர்.

The post சோலைமலை முருகன் கோயிலில் அறுபடை வீடு ஆன்மிக பயணம் appeared first on Dinakaran.

Tags : Arupada Veedu ,Solaimalai ,Murugan Temple ,Madurai ,Solaimalai Murugan Temple ,Alagharkovil ,Swami ,Department of Charities ,Tamil Nadu ,Arupadai Murugan Temples ,
× RELATED 200 மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை...