×

அசைவம் சாப்பிட காதலன் எதிர்ப்பு: ஏர் இந்தியா பெண் விமானி தற்கொலை


மும்பை: மும்பை மரோல் பகுதியில் கனகியா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சிருஷ்டி துலி. வயது 25. ஏர்இந்தியாவின் பெண் விமானி. இவரது காதலன் ஆதித்யா பண்டிட்(27). ஆதித்யா பண்டிட் சுத்த சைவம். இதனால் காதலி சிருஷ்டி துலி அசைவம் சாப்பிடுவதை எதிர்த்தார். நேற்று ஆதித்யா பண்டிட் தனது காரில் டெல்லி சென்றார். அப்போது வீட்டில் இருந்த சிருஷ்டி துலி தான் தற்கொலை செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து காரை திருப்பிய ஆதித்யா மும்பை விரைந்தார். அங்கு சென்று பார்த்த போது சிருஷ்டி துலி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

The post அசைவம் சாப்பிட காதலன் எதிர்ப்பு: ஏர் இந்தியா பெண் விமானி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Air India ,MUMBAI ,Srishti Dhuli ,Kanakiya Apartments ,Marol ,Aditya Pandit ,Srishti Tuli ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது