×

குறை தீர்க்கும் முகாமில் மக்களிடம் மனு பெற்றார் போலீஸ் கமிஷனர் அருண்: 282 மனுக்கள் மீது உரிய தீர்வு

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் முகாமில் போலீஸ் கமிஷனர் அருண் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெற்றார். இதுவரை பெறப்பட்ட மனுக்களில் 282 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல்துறை கமிஷனராக அருண் பதவியேற்ற பிறகு கடந்த ஜூலை 8ம் தேதி முதல் கடந்த 20ம் தேதி வரையிலான காலத்தில், காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் நேரடியாக 391 மனுக்கள் பெற்றுள்ளார். அந்த மனுக்களில் 282 மனுக்கள் மீது விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 109 மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில், கமிஷனர் அருண் கலந்து கொண்டு, 25 பேரிடம் நேரடியாக மனுக்கள் பெற்றார். அப்போது புகார் அளித்த பொதுமக்களிடம் கனிவாக பேசிய அவர், புகார்கள் அளித்தவர்கள் முன்னிலையிலேயே சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் தலைமையிட இணை கமிஷனர் கயல்விழி, துணை கமிஷனர் மேக்லினா ஐடன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post குறை தீர்க்கும் முகாமில் மக்களிடம் மனு பெற்றார் போலீஸ் கமிஷனர் அருண்: 282 மனுக்கள் மீது உரிய தீர்வு appeared first on Dinakaran.

Tags : Police Commissioner ,Arun ,Chennai ,Chennai Police Commissioner ,Chennai Metropolitan Police ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி...