×
Saravana Stores

சாதிக்கப் பிறந்தவர்களுக்குச் சாதி தடையில்லை என்பதை நிறுவுவோம்: வி.பி.சிங்கிற்கு முதல்வர், துணை முதல்வர் புகழஞ்சலி!!

சென்னை : இந்தியாவின் முன்னாள் பிரதமரும், சமூக நீதிக் காவலருமான வி.பி.சிங்கின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் விபி சிங்கின் நினைவு நாளான இன்று, அவரது சாதனையைப் போற்றியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.”இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் – சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் புகழ் ஓங்குக! உயர்கல்வியிலும் – வேலைவாய்ப்புகளிலும் – தலைமைப் பொறுப்புகளிலும் நமது திறமையால் சாதனை படைத்து அவருக்கு நன்றி செலுத்துவோம்! சாதிக்கப் பிறந்தவர்களுக்குச் சாதி தடையில்லை என்பதை நிறுவுவோம்!” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய ஒன்றியத்தின் கோடான கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய சமூகநீதிக் காவலர் – முன்னாள் பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களின் நினைவு நாள் இன்று. அரச குடும்பத்தில் பிறந்து இருந்தாலும், அடித்தட்டு மக்களுக்காக சிந்தித்தவர். சமூகநீதியை விட பிரதமர் பதவியே பெரிதல்ல என்று துணிந்து, மண்டல் அறிக்கைக்கு உயிர் கொடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நண்பர். வி.பி.சிங் அவர்களின் புகழ் என்றும் நம் நெஞ்சங்களில் வாழும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post சாதிக்கப் பிறந்தவர்களுக்குச் சாதி தடையில்லை என்பதை நிறுவுவோம்: வி.பி.சிங்கிற்கு முதல்வர், துணை முதல்வர் புகழஞ்சலி!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,VP ,Singh ,Chennai ,Prime Minister of ,India ,VP Singh ,Chennai State College ,Deputy ,Bukhajanjali ,
× RELATED உலக அளவில் சிறந்த காவல்துறையாக...