×

மாநில நீச்சல் போட்டிக்கு நத்தம் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு: ஆசிரியர்கள் பாராட்டு

 

நத்தம், நவ. 27: திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவில் நடந்த நீச்சல் போட்டிகளில் 15க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 25 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 23 மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து வரும் ஜனவரியில் திருநெல்வேலியில் மாநில அளவில் நடைபெறும் நீச்சல் போட்டிக்கு இவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தேர்வான இந்த மாணவர்களை அப்பள்ளியின் தலைமையாசிரியர் ரவிச்சந்திரன், உடற்கல்வி இயக்குனர் ராஜ்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் அந்தோணி மேரி, கிளாரா ராணி ஆகியோர் பாராட்டினர். மேலும் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற ஊக்கப்படுத்தி ஆர்வமூட்டினர்.

The post மாநில நீச்சல் போட்டிக்கு நத்தம் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு: ஆசிரியர்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Natham Govt School ,Natham ,Dindigul Revenue District ,Natham Duraikamalam Government Model Higher Secondary School ,Natham Government School ,
× RELATED ஆலங்குளம் அம்மன் கோயிலில் திருட முயன்றவரை பிடித்த பொதுமக்கள்