×

காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில் நுண்ணறிவுப்பிரிவு காவலர்களிடம் கமிஷனர் அருண் மனுக்கள் பெற்றார்: உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை: சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில், நுண்ணறிவு பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவு காலர்களிடம் போலீஸ் கமிஷனர் அருண் நேரடியாக மனுக்கள் பெற்றார். சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்களிடம் பிரிவு மற்றும் மண்டல வாரியாக போலீஸ் கமிஷனர் அருண் நேரடியாக ‘காவலர்கள் குறை தீர்க்கும் முகாம்’ மூலம் மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அந்த வகையில், வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நுண்ணறிவுப்பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவு காலர்களுக்கான ‘காவலர்கள் குறை தீர்க்கும் முகாம்’ நேற்று நடந்தது. முகாமில் போலீஸ் கமிஷனர் அருண் கலந்து கொண்டு காவலர்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு மனுக்கள் பெற்றார்.

அப்போது, பெரும்பாலான காவலர்கள், தங்களுக்கு பணிமாறுதல், தண்டனை ரத்து செய்தல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்டவை கேட்டு 38 காவலர்கள் மனுக்களாக வழங்கினர். அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த குறை தீர்க்கும் முகாமில் பெருநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரட்கர், நுண்ணறிவுப்பிரிவு இணை கமிஷனர் தர்மராஜன், தலைமையிட துணை கமிஷனர் கயல்விழி, பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர் சுஜித்குமார், நிர்வாகப்பிரிவு துணை கமிஷனர் அதிவீரப்பாண்டியன், நுண்ணறிவுப்பிரிவு துணை கமிஷனர் ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில் நுண்ணறிவுப்பிரிவு காவலர்களிடம் கமிஷனர் அருண் மனுக்கள் பெற்றார்: உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Commissioner ,Arun ,Intelligence ,Grievance Redressal Camp ,CHENNAI ,Intelligence Division ,Security Division ,Police Grievance Redressal Camp ,Chennai Metropolitan Police Commissioner's Office ,Dinakaran ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி...