×

உங்களை தேடி உங்கள் ஊரில் தாம்பரம் மாநகராட்சியில் இன்று குறைதீர் முகாம்: கலெக்டர் தகவல்


சென்னை: தாம்பரத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் இன்று குறைதீர் முகாமில் பல்வேறு வளர்ச்சி பணிகள் ஆய்வு செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண் ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை செயலாக்கும் நோக்கில் இன்று (புதன் கிழமை) அன்று, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களால், தாம்பரம் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக்கடைகள், பள்ளிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் ஆய்வு செய்யப்படும்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக மேற்படி தினத்தன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை “தாம்பரம், மாநகராட்சி அலுவலகத்தில்” பொதுமக்கள் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து தங்களது குறைதீர் மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post உங்களை தேடி உங்கள் ஊரில் தாம்பரம் மாநகராட்சியில் இன்று குறைதீர் முகாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tambaram Municipal Corporation ,Kuradithir Camp ,CHENNAI ,Tambaram ,Chengalpattu District ,Collector ,Arun Raj ,
× RELATED பல்வேறு திட்ட நிதிகளின் கீழ் 200 சாலை...