×

முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாகர்கோவில், நவ.27: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 2 அன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உரிய விண்ணப்பமாக இரண்டு பிரதிகளில் மாவட்ட கலெக்டரிடம் நேரில் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

The post முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ex-Veteran Decommissioning Day ,Nagarko ,Kumari ,District Collector ,Akakumina ,Kanyakumari district ,Former ,Veteran Dedication Day ,Dinakaran ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...