×

திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டையில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

திருத்தணி: திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில், காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மூன்றாம் கட்ட போராட்டம் நேற்று தொடங்கியது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட 20 பேர் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் நீண்ட நேரம் தாசில்தார் அலுவலகத்தில் காத்திருந்து திரும்பிச் சென்றனர். இதேபோல், பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணியை புறக்கணிப்பு செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டையில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Pallipatta ,RK Pettah ,Tamil Nadu Revenue Department ,Department of Revenue and Disaster Management ,
× RELATED மாவட்டத்தில் ஆள் பற்றாக்குறை காரணமாக...