×

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் கே.என்.நேரு வீடு திரும்பினார்


சென்னை: காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் கே.என்.நேரு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடந்த சில வாரங்களாக கண்காணித்து வந்தார். இதனால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.இதையடுத்து, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கே.என்.நேரு நேற்று அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சளி மற்றும் இருமல் பிரச்னை இருந்ததால், அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அவர், சிகிச்சை முடிந்து நேற்று மாலை வீடு திரும்பினார். மேலும் சில காலம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

The post மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் கே.என்.நேரு வீடு திரும்பினார் appeared first on Dinakaran.

Tags : minister ,KN Nehru ,CHENNAI ,DMK ,General Secretary ,Municipal Administration Department ,Dinakaran ,
× RELATED மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு கலைஞர் வீடு: அமைச்சர் பேட்டி