×
Saravana Stores

நடிகர் பார்த்திபனுக்கு திடீர் ஆசை; நானும் ஒருநாள் கட்சி ஆரம்பிப்பேன்: அரசியலில் பயங்கர ஈடுபாடு உள்ளதாக பேட்டி


புதுச்சேரி: எனக்கு அரசியலில் பயங்கர ஈடுபாடு உள்ளது, எனவே நானும் ஒருநாள் கட்சி ஆரம்பிப்பேன் என நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியை, திரைப்பட நடிகர் பார்த்திபன் நேற்று சந்தித்தார். அப்போது கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகளுக்கு கட்டணத்தை அரசு குறைத்ததற்கு நன்றி தெரிவித்தார். பின்னர் நடிகர் பார்த்திபன் நிருபர்களிடம் கூறியதாவது: உலகில் மிக அழகான கடற்கரை நகரங்களில் புதுச்சேரியும் ஒன்று.சினிமா படப்பிடிப்பு கட்டணம் குறைக்கப்பட்டால், புதுச்சேரியில் சுற்றுலா மேம்படும். நிறைய படப்பிடிப்பு நடைபெறும். இந்த ஆண்டு விவாகரத்து ஆண்டு போல. அதனால்தான் திரைத்துறையில் நிறைய விவாகரத்து செய்திகள் வந்துள்ளது. இசையமைப்பாளர் ரஹ்மானுடன் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக பழகியுள்ளேன்.

அவர் மிகவும் தூய்மையானவர். அவரை போல ஒரு சிறந்த மனிதர் உலகிலேயே கிடைக்க மாட்டார். அதனால்தான் விவாகரத்து அறிவித்த அவரது மனைவியே அவரைப் பற்றி யாரும் தவறாக பேச வேண்டாம் என கூறியுள்ளார். அவர்கள் விவாகரத்து விஷயத்தில் நாம் தலையிட்டு இருக்கக் கூடாது. அவசரப்பட்டு கருத்து கூறிவிட்டோமோ என தோன்றுகிறது. நடிகர் விஜய்யின் அரசியலை தவிர்க்க முடியாத ஒரு அரசியலாக பார்க்கிறேன். ரஜினி, கமல் அரசியலுக்கு வரும்போது கூட இவர்கள் வந்து என்ன செய்து விடுவார்கள் என விமர்சனங்கள் இருந்தது. அதுபோல விமர்சனங்கள்தான் தற்போது விஜய்க்கும் உள்ளது. ஆனால் அவருடைய எழுச்சி என்பது மிகவும் பிரமாதமாக உள்ளது. எனக்கும் அரசியலில் பயங்கர ஈடுபாடு உள்ளது. நானும் ஒரு நாள் கட்சி ஆரம்பிப்பேன், என் அரசியல் யாரையும் சார்ந்து இருக்காது.

புதிய பாதை தொடங்கி என்னுடைய அனைத்து படங்களிலும் அரசியல் உள்ளது. எனக்கும் அரசியல் விருப்பம் உள்ளது, ஆனால் அது இப்போதைக்கு இல்லை. இன்று சமூகத்தில் பெண்களுக்கு நிறைய பாதுகாப்பு உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு தேவை, பாதுகாப்பு தேவை என கூறி நாம் தான் அவர்களை பலவீனம் ஆக்கி விடுகிறோமோ எனத்தோன்றுகிறது. ஒரு ஆணை விட பெண்தான் வலிமையானவர். நயன்தாரா, தனுஷ் இடையிலான கருத்து வேறுபாடு சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒரு பக்கம் தனுஷ், ஒரு பக்கம் நயன்தாரா. இதில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த அவர்கள், ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்திருந்தது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. நாம் பார்வையாளர்கள் அதனால் இரு தரப்பையும் நான் ரசிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post நடிகர் பார்த்திபனுக்கு திடீர் ஆசை; நானும் ஒருநாள் கட்சி ஆரம்பிப்பேன்: அரசியலில் பயங்கர ஈடுபாடு உள்ளதாக பேட்டி appeared first on Dinakaran.

Tags : Partipan ,Puducherry ,Parthiban ,Chief Minister ,Rangasamy ,Assembly ,Corona ,
× RELATED கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!