×
Saravana Stores

நாகையில் இருந்து 520 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது: வானிலை மையம்

நாகை: நாகையிலிருந்து 520 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கில் 720 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் குறைந்தது. ஏற்கனவே மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 8 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை அதிகனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

The post நாகையில் இருந்து 520 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Chennai ,Bay of Bengal ,Dinakaran ,
× RELATED ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது..!!