×

திருவாரூர் தலைமை தபால் நிலைம் முன்பாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

 

திருவாரூர், நவ. 26: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியினை ஒன்றிய அரசு உடனடியாக வழங்கிட கோரி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைந்த கல்வி திட்டம் எனப்படும் எஸ்.எஸ்.ஏ., விற்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியினை தமிழக அரசுக்கு உடனடியாக ஒன்றிய அரசு வழங்கிட கோரியும், தேசிய கல்விக் கொள்கையினை அமல்படுத்தினால் தான் நிதியினை வழங்குவேன் என்ற ஒன்றிய அரசின் முடிவினை கண்டித்தும், கல்வி நிலையங்களில் மத கருத்துக்களை திணிக்க முயற்சி செய்து வரும் ஆளுநர் ரவியை உடனடியாக திரும்ப பெற கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் நேற்று திருவாரூரில் தலைமை காவல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் பாரத செல்வன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரைஅருள்ராஜன், மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

The post திருவாரூர் தலைமை தபால் நிலைம் முன்பாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : All India Students Forum ,Tiruvarur Head Post Office ,Tiruvarur ,All India Students' Congress ,Tamil ,Nadu ,Union Government ,Tamil Nadu ,SSA ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ...