×

சிக்னல் கோளாறு ரயில் சேவை பாதிப்பு

திருவொற்றியூர், நவ.26: கும்மிடிப்பூண்டியில் இருந்து திருவொற்றியூர் மார்க்கமாக சென்ட்ரலுக்கு ஏராளமான மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், நேற்று மாலை 6.10 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் திருவொற்றியூர் ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் வந்தது. அப்போது அங்கிருந்த பயணிகள் ரயிலில் அவசர அவசரமாக ஏறினர். ஆனால் வெகு நேரமாகியும் ரயில் புறப்படவில்லை. இதனால் ரயிலில் ஏறிய பயணிகள் சிலர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று விசாரித்தனர். அப்போது திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டதாகவும், சிக்னல் கிடைக்காததால் ரயில்கள் நிற்கின்றன. சிக்னலை சரி செய்யும் பணி நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதன் காரணமாக பின்னால் வந்த மூன்று மின்சார ரயில்களும் ஆங்காங்கே வரிசையாக நின்றன. பின்னர் சுமார் 50 நிமிடத்திற்கு பின் சிக்னல் சரி செய்யப்பட்டதாக வந்த தகவலை அடுத்து நின்று கொண்டிருந்த ரயில்கள் அடுத்தடுத்து புறப்பட்டன. இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post சிக்னல் கோளாறு ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvotiyur ,Kummidipundi ,Tiruvotiyur Markan Central ,Thiruvotiyur railway ,Signal ,
× RELATED எண்ணூர் அருகே உயர் மின்னழுத்த கம்பி...