×

காலபைரவர் கோயிலில் தெப்ப உற்சவம்

தர்மபுரி, நவ.26: அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோயிலில் காலாஷ்டமி விழா கடந்த 22ம்தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. 23ம்தேதி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு, கோயில் அருகே உள்ள பைரவ புஷ்கரணி குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. முன்னதாக, உற்சவர் ராஜ அலங்காரத்தில், ஊர்வலமாக புஷ்கரணி குளத்திற்கு சென்றடைந்தார். அவருக்கு ராஜ உபசார பூஜைகள் நடந்தன. அதேசமயம், மூலவர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post காலபைரவர் கோயிலில் தெப்ப உற்சவம் appeared first on Dinakaran.

Tags : Theppa Utsavam ,Kalabhairava Temple ,Dharmapuri ,Kalashtami festival ,Dakshinakasi Kalabhairava Temple ,Athiyamankot ,Kalabhairava ,Kalabhairavaar Temple ,
× RELATED தர்மபுரி நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்