×

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

தர்மபுரி, நவ.26: நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். நல்லம்பள்ளி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், ‘மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க, அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து தெரிந்திருக்க வேண்டியது அவசியம். குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப்பொருள் பயன்படுத்துவதால் உடல் உபாதைகள், செரிமான பிரச்னைகள், கேன்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே, மாணவப் பருவத்தினர் போதை பழக்கத்தில் ஆளாகாமல் விழிப்புணர்வோடு இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்,’ என்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

The post போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Awareness ,Dharmapuri ,Nallampally Government High School ,Principal ,Thirunavukarasu ,Nallampalli Union ,Food Safety Officer ,Kandasamy ,Sarankumar ,Dinakaran ,
× RELATED தர்மபுரி நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்