×

கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட வேண்டும்: அமித்ஷாவிடம் அமைச்சர் பெரியகருப்பன் கோரிக்கை மனு

சென்னை: ஒன்றிய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அளித்த மனுவில்: நபார்டு வழங்கும் சலுகை மறுநிதியளிப்பு, மாநிலத்தில் உள்ள கூட்டுறவுகளின் ஒட்டுமொத்த குறுகிய கால கடன் அளவிற்கேற்ப உயர்த்தி வழங்கப்பட வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் வருமான வரி டிடிஎஸ் பிடித்தங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். என்சிடிசி மூலம் ஐசிடிபி போன்ற திட்டங்கள் நியாயமான வட்டி விகிதத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

வித்யா லட்சுமி, சூர்யா கர், எம்எஸ்எம்இ திட்டங்கள் போன்ற பல்வேறு ஒன்றிய அரசு திட்டங்களின்கீழ் பயனாளிகளுக்கு கடன் வழங்க தகுதியான வங்கிகளின் பட்டியலில், கூட்டுறவு வங்கிகள் சேர்க்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். 23 கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களின் உள்கட்டமைப்பை சீரமைக்க இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியத்துக்கு அனுப்பப்பட்ட சுமார் ரூ. 124 கோடி முன்மொழிவை சாதகமாக பரிசீலிக்க வேண்டும். கேசிசி திட்டத்தின்கீழ் கடன்களை சொந்த நிதியிலிருந்து வழங்கும் வங்கிகளுக்கு 1.5% குறைக்கப்பட்ட வட்டி மானியத்தில் இருந்து 2% ஆக ஜிஓஐ-ஆல் உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.

The post கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட வேண்டும்: அமித்ஷாவிடம் அமைச்சர் பெரியகருப்பன் கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyakaruppan ,Amit Shah ,CHENNAI ,Union Minister for Cooperatives ,KR Periyagaruppan ,NABARD ,Dinakaran ,
× RELATED கோவையில் அமித்ஷாவை கண்டித்து போஸ்டர்கள்