×

மலையாள நடிகை பலாத்கார வழக்கு; நடிகர் திலீப்பை மீண்டும் விசாரிக்க திட்டம்: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையின் பலாத்கார காட்சிகள் நடிகர் திலீப்பிடம் இருப்பதாக அவரது நண்பர் கூறியதை தொடர்ந்து நடிகர் திலீப்புக்கு அடுத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலீசார் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளனர். பிரபல மலையாள நடிகை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விசாரணை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட போது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும், அவர் அந்த காட்சிகளைப் பார்த்தது தனக்குத் தெரியும் என்று திலீப்பின் நண்பரும், இயக்குனருமான பாலச்சந்திர குமார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், பாலச்சந்திர குமார் கூறியது தொடர்பாக விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி விசாரணை நீதிமன்றத்தில் போலீசார் ஒரு மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் வரும் 20ம் தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இயக்குனர் பாலச்சந்திர குமாரிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நடிகர் திலீப்புக்கும் எதிராக போலீசுக்கு பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் இந்த விசாரணை தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளனர். நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட போது அந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்ட செல்போன் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொர்பாக போலீசார் தீவிர முயற்சி எடுத்தும் இதுவரை அந்த செல்போன் எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான  சுனில்குமாரிடமிருந்து அந்த காட்சிகள் அடங்கிய நகலை போலீசார் கைப்பற்றினர். இந்த நகல் தற்போது விசாரணை நீதிமன்றத்தின் வசம் உள்ளது. இந்த நகலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில்தான் நடிகையின் பலாத்கார காட்சிகள் நடிகர் திலீப்பிடம் இருப் பதாகவும், அதை  அ வர் பார்த் தது தனக்குத் தெரியும் என்றும் டைரக்டர் பாலச்சந்திர குமார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பான ஆவணங்களை விசாரணையின் போது பாலச்சந்திர குமார் போலீசாரிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணையின்போது, பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான சுனிலுடன் நடிகர் திலீப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்களையும் அவர் கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து பாலசந்திர குமாரிடம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் பெற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக எர்ணாகுளம் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் போலீசார் தீர்மானித்துள்ளனர்.நீதிமன்றத்தில்  பாலச்சந்திர குமார் ரகசிய வாக்குமூலம் அளித்தால் அது திலீப்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். இதற்கிடையே இவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப்பிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்புக்கு பிடி இறுகி வருகிறது….

The post மலையாள நடிகை பலாத்கார வழக்கு; நடிகர் திலீப்பை மீண்டும் விசாரிக்க திட்டம்: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Dileep ,Thiruvananthapuram ,
× RELATED கேரளம் ஆக மாறியது கேரளா