×

கேரளம் ஆக மாறியது கேரளா


திருவனந்தபுரம்: கேரளா என்ற பெயரை கேரளம் என மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக ஒரு கோரிக்கை இருந்து வந்தது. இதையடுத்து கடந்த வருடம் இது தொடர்பாக கேரள சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது அரசியலமைப்பின் ஒன்று மற்றும் எட்டாவது பட்டியலில் கேரளாவின் பெயரை கேரளம் என மாற்ற வேண்டுமென அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஒன்றாவது பட்டியலில் மட்டும் பெயரை மாற்றினால் போதும் என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. இதன்படி நேற்று கேரள சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் இது தொடர்பான திருத்தப்பட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.தொடர்ந்து இந்த பெயர் மாற்ற மசோதா ஏகமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

The post கேரளம் ஆக மாறியது கேரளா appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kerala Assembly ,
× RELATED கேரள வாகனங்களுக்கு தமிழ்நாட்டில் வரி...