×

மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் வாங்கிய ஆனந்தி

சென்னை: பொறியாளன், கயல், பரியேறும் பெருமாள் படங்களில் நடித்தவர் ஆனந்தி. ‘மூடர்கூடம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நவீனின் மைத்துனர் சாக்ரடீஸ் என்பவரை காதலித்து வந்த ஆனந்தி, கடந்த 2021ல் அவரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியாகியது. தற்போது ‘அலாவுதினின் அற்புத கேமரா’, ‘ஏஞ்சல்’, சாந்தனுவுக்கு ஜோடியாக ‘இராவணக் கோட்டம்’ படங்களில் நடித்துள்ளார். இதில் இராவணக் கோட்டம் படம் மே 12ல் வெளிவர இருக்கும் நிலையில் இதற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் ஆனந்தி கலந்து கொண்டு வருகிறார்.

அப்போது பேசிய அவர், ‘என்னுடைய மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் பெற்றுள்ளேன். இந்த முடிவிற்கு நான் படித்த புத்தகங்களும் நான் சந்தித்த நபர்களின் உரையாடலுமே காரணம்’ என்று கூறியுள்ளார். பரியேறும் பெருமாள் படத்திலும் தனது சாதியை சேராத ஒருவரை காதலிப்பவராக அவர் நடித்திருந்தார். தற்போது மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்குப் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

The post மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் வாங்கிய ஆனந்தி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anandhi ,chennai ,Socrates ,Navin ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...