×
Saravana Stores

ஐபிஎல் மெகா ஏலம் 2-ம் நாள்: ரூ.10.75 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் புவனேஷ்வர் குமார்!

ஜெட்டா: 18வது சீசன்ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று நடந்தது. மொத்தமாக 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் 72 வீரர்கள் மொத்தமாக 467 கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

முதல் நாள் ஏலத்தில் அதிகபட்சமாக ரிஷப் பன்ட்டை 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி வாங்கியது. ஸ்ரேயாசை ரூ.26 கோடியே 50 லட்சத்திற்கு பஞ்சாப் எடுத்தது. தமிழக வீரர் அஸ்வின் 10 ஆண்டுக்கு பின் சிஎஸ்கே அணிக்கு திரும்பிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக 505 வீரர்களுக்கான ஐபிஎல் ஏலம் இன்று தொடர்கிறது.

  • கேன் வில்லியம்சன் விற்கப்படவில்லை
  • க்ளென் பிலிப்ஸ் விற்கப்படாமல் இருக்கிறார்
  • வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மேன் பவலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.1.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
  • ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ்சை டெல்லி அணி 2 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. இதனை அடுத்து அரங்கில் டெல்லி ரசிகர்களின் பெரும் ஆரவாரம் செய்தனர்.
  • அஜிங்க்யா ரஹானேவை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
  • மயங்க் அகர்வாலை அணிகள் ஏலத்தில் எடுக்கவில்லை.
  • பிரித்வி ஷா விற்கப்படவில்லை.
  • ஷர்துல் தாக்கூரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
  • அடுத்து களமிறங்கும் வீரர் வாஷிங்டன் சுந்தரை குஜராத் அணி 3.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
  • சாம் கர்ரனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2.4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
  • மார்கோ ஜான்சன் ரூ.7 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விற்க்கப்பட்டார்.
  • க்ருனால் பாண்டியாவை ஏலம் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் போட்டி போட்ட நிலையில், ரூ.5.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலம் எடுத்துள்ளது.
  • நிதிஷ் ராணாவை ரூ.4.2 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
  • டேரில் மிட்செல், ஷாய் ஹோப், கே.எஸ்.பரத், அலெக்ஸ் கேரி, டானவன் ஃபெரீரா ஆகிய வீரர்கள் விற்கப்படவில்லை.
  • ரியான் ரிக்கல்டனை ரூ.1 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்துள்ளது.
  • ஜாஸ் இங்லிஸ் ரூ.2.6 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
  • ரூ.6.5 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் துஷார் தேஷ்பாண்டே!
  • ரூ.2.40 கோடிக்கு குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ஜெரால்ட் கோட்ஸி!
  • புவனேஷ்வர் குமாரை ஏலம் எடுக்க மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினர் கடுமையாக போட்டியிட்ட நிலையில், ரூ.10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலம் எடுத்துள்ளது.
  • முகேஷ் குமாரை ரூ.2.40 கோடிக்கு RTM-ஐ பயன்படுத்தி டெல்லி அணி தக்கவைத்தது
  • ரூ.9.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் தீபக் சாஹர்
  • ரூ.8 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ஆகாஷ் தீப்
  • ரூ.8 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் லாக்கி பெர்குசன்
  • ரூ.4.8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் அல்லா கசன்ஃபார்
  • முஜிப் உர் ரஹ்மான், விஜயகாந்த் வியாஸ்காந்த, அகில் ஹொசேன், ஆதில் ரஷீத், கேஷவ் மஹராஜ் அகிய வீரர்கள் இந்த ஐபிஎல் ஏலத்தில் விற்க்கப்படவில்லை.

The post ஐபிஎல் மெகா ஏலம் 2-ம் நாள்: ரூ.10.75 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் புவனேஷ்வர் குமார்! appeared first on Dinakaran.

Tags : IPL ,BHUBANESHWAR KUMAR ,BANGALORE ,Zeta ,Jetta, Saudi Arabia ,Bengaluru ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் புதிய...