×

கும்பகோணம், நெல்லையை தொடர்ந்து மதுரையில் நடந்த அதிமுக கள ஆய்வுக் கூட்டத்திலும் நிர்வாகிகள் மோதல்.! முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் பரபரப்பு

மதுரை: மதுரையில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக்குழு ஆலோசனை கூட்டத்தில், கழகத்தில் கிளை, வார்டு, வட்டக கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது சம்பந்தமான கருத்துகளை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் இன்று கிளை, வார்டு. வட்டக கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் குறித்த அதிமுக கள ஆய்வுக்கு கூட்டம் நடைபெற்றது.

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், கோஷ்டியாக பிரிந்து வந்த அதிமுகவினர் இருவருக்கும் முன்னிலையிலேயே வாக்குவாதத்தில் தொடங்கி, கைக்கலப்புக்கு சென்று அடிததடி வரை சென்றது மதுரை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜூ அங்கு இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் கள ஆய்வு கூட்டத்திலேயே கோஷ்டி பூசல் வெடித்து மோதலுக்கு வித்திட்டுள்ளது. ஏற்கனவே, நெல்லை, கும்பகோணத்தில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்தில் மோதல் வெடித்த நிலையில், மதுரையில் அதே மாதிரியான மோதல் ஏற்பட்டுள்ளது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

The post கும்பகோணம், நெல்லையை தொடர்ந்து மதுரையில் நடந்த அதிமுக கள ஆய்வுக் கூட்டத்திலும் நிர்வாகிகள் மோதல்.! முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Madura ,Kumbakonam ,Nellai ,Madurai ,Aimuga Field Study Group Advisory Meeting ,Raiappetta, Chennai ,Atamuga Field Study Meeting ,Dinakaran ,
× RELATED கண்மாய்களில் இருந்து வெளியேறும்...