×

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள்

*அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

அருப்புக்கோட்டை : அருப்புக்கேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம், மேல்நிலைகுடிநீர் நீர்தேக்கத்தொட்டி, பள்ளிகட்டிடங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேதுராஜபுரத்தில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் ஒன்றிய பொது நிதியில் கட்டப்பட்ட கலையரங்கம், வேலாயுதபுரத்தில் ரூ.27 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் ஜல்ஜீவன் நிதியில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைநீர் தேக்கத்தொட்டி, சேதுராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட காசிலிங்காபுரத்தில் ரூ.32 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளிகட்டிடம், பெரியதும்மக்குண்டில் ரூ.27 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் ஜல்ஜீவன் நிதியில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவற்றின் திறப்பு விழாவும், பந்தல்குடிகிராம ஊராட்சி நெடுங்கரைபட்டியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுநிதியில் சுகாதாரவளாகம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவும் நேற்று நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் வட்டாரவளர்ச்சி அலுவலர்காஜாமைதீன் பந்தேநவாஸ், ஒன்றிய திமுக செயலாளர்கள் பாலகணேசன், பொன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கொப்பையராஜ், மாவட்டபிரதிநிதி வேலுச்சாமி, மாவட்டகவுன்சிலர் பாலசந்தர், மாவட்ட சுற்றுசூழல் அணிஅமைப்பாளர் தாமோ.வெங்கடேஷ், துணைஅமைப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட தொண்டர்அணி துணைஅமைப்பாளர் கணேசன், ஒன்றியகவுன்சிலர் கோவிந்தசாமிநாதன், ஒன்றிய இளைஞரணிஅமைப்பாளர் அழகுராமனுஜம், மாவட்ட பொறியாளர்அணிதுணை அமைப்பாளர்முகைதீன்,தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் வெங்கட்ராமன்,ஜேசிபிசிவா, கன்னியப்பன்,ஊராட்சிமன்ற தலைவர்கள்பாலாஜிபத்ரிநாத்,தங்க அழகுமுருகன்,ரெட்டியார்நல அறக்கட்டளை சந்திரபால்,உட்பட பலர்கலந்துகொண்டனர்.

The post அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் appeared first on Dinakaran.

Tags : Aruppukkottai panchayat ,Minister ,Chatur Ramachandran ,Arupukottai ,Arupukkett Panchayat Union Area ,
× RELATED நிதி அமைச்சரின் விளக்கத்தால்...