- முதல் அமைச்சர்
- கே
- ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல்வர் எம்.எல்.ஏ.
- கன்னகி, சென்னை
- கே. ஸ்டாலின்
சென்னை : சென்னை கண்ணகி நகரில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக விழுதுகள் என்ற மறுவாழ்வு மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த மையம் மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம் தொடர்பான மறுவாழ்வு சேவைகள் வழங்கும் மையமாக அமைந்துள்ளது. ரூ.3.08 கோடி செலவில் விழுதுகள் சேவை மையம் சீரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கண்ணகி நகர் நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள் – குழந்தைகளைக் கையில் ஏந்தி முத்தமிட்டு அன்பை அவர் பரிமாறிக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, சென்னை எழில்நகரில் “நமக்கு நாமே” திட்டத்தின்கீழ் மழலையர் பள்ளியில் சீரமைக்கப்பட்டுள்ள பள்ளிக் கூடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களையும் அவர் வழங்கினார். மேலும் அவர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம் ,அதானி தமிழ்நாட்டோடு ஒப்பந்தம் என்று வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை. தினமும் அரசுக்கு எதிராக அறிக்கை விட்டுட்டு இருப்பார். அதுக்குலாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதானி விவகாராத்தில் துறையின் அமைச்சரே விளக்கம் அளித்துள்ளார். அதை தேவையில்லாமல் ட்விஸ்ட் பண்ணாதிங்க” என்றார். மேலும், “நாடாளுமன்றத்தில் என்னென்ன பேச வேண்டும் என எம்.பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை வலியுறுத்தி பேசுவார்கள். பெரும் மழை எதிர்பார்க்குறோம், பார்க்கல. அது தேவையில்லை. நாங்க தயாரா இருக்கிறோம். மழை குறித்து டெல்டா மாவட்ட ஆட்சியாளர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
The post “மழையை எதிர்பார்க்கிறோமோ இல்லையோ.. நாங்க எதிர்கொள்ளத் தயாரா இருக்கிறோம்..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.