×
Saravana Stores

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை

*திருத்துறைப்பூண்டி அருகே சோகம்

திருத்துறைப்பூண்டி : பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவாரூர் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டுர்தோப்பு தெருவை சேர்ந்த சமரசபாண்டி மகன் உதயபிரகாஷ் (23). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவரும், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள நீடூர் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மகள் ஹேமா (21) என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரும், பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 5-9-2024 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் உதயபிரகாஷ், ஆட்டுர்தோப்பு தெருவில் உள்ள தனது சித்தப்பாவுக்கு சொந்தமான வீட்டில் தனது மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு தம்பதி அறையில் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலையில் உதயபிரகாஷ் எழுந்து பார்த்தபோது மனைவி ஹேமா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். வீட்டுக்கு வந்த அனைவரும், ஹேமாவை மீட்டு துக்கம் தாங்காமல் அழுது கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஹேமா தூக்கில் தொங்கிய கயிற்றை எடுத்து சென்று உதயபிரகாஷ் அருகில் உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், யுவராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலித்து திருமணம் செய்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruthurapoondi ,Thiruthurapoondi ,Tiruvarur ,Aturthoppu street ,Thiruvarur district ,
× RELATED மில்லில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!!