×

தேர்தல் தோல்வி எதிரொலி கட்சிக்கு புதிய தலைமை: சரத்பவார் அறிவிப்பு

கராட்: மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் குறித்து, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: இந்த தேர்தலில் மகாயுதி கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு லட்கி பகின் மற்றும் மத ரீதியாக ஒருங்கிணைக்கும் பிரசாரங்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம் எனத் தெரிகிறது. பெண்கள் வாக்குகள் அதிகரிப்புக்கு காரணமும் இதுவாகத்தான் இருக்கும். இருப்பினும், தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்து, அதை சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை. எனது அரசியல் பயணத்தில் இதுவரை பார்த்திராத ஒன்றாக இந்த முடிவு இருக்கிறது. மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதா என்பது பற்றி, வாக்குப்பதிவு பற்றிய முழு புள்ளி விவரங்களையும் பார்த்த பிறகுதான் கூற முடியும். யுகேந்திரபவாரை பாராமதியில் நான் நிறுத்தியது சரியான முடிவுதான். கட்சிக்கு புத்துயிரூட்டி புதிய தலைமையுடன் மக்களை மீண்டும் சந்திப்போம் இவ்வாறு சரத்பவார் கூறினார்.

The post தேர்தல் தோல்வி எதிரொலி கட்சிக்கு புதிய தலைமை: சரத்பவார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sharad Pawar ,Karat ,Maharashtra ,Nationalist Congress Party ,Sarath Chandrapawar ,Ladki Bagin ,Mahayudi alliance ,
× RELATED தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு...