×

எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் அறிவிப்பு: தலைவராக மீண்டும் நெல்லை முபாரக் தேர்வு

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் 10வது மாநில பொதுக்குழு கடந்த 2 நாட்களாக நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் அடுத்த 3 ஆண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சி தலைவராக மீண்டும் நெல்லை முபாரக் தேர்வு செய்யப்பட்டார்.

துணை தலைவர்களாக அப்துல் ஹமீது, அச உமர் பாரூக், பொதுச்செயலாளர்களாக நிஜாம் முகைதீன் (நிர்வாகம்), முகமது நஸ்ரூதீன் (அமைப்பு), அகமது நவவி, ஏ.கே.கரீம், அபுபக்கர் சித்திக், செயலாளர்களாக ஏ.எஸ்.ஷபீக் அஹம்மது, பாஸ்டர் வி.மார்க், ஹமீது ஃபிரோஜ், அப்துல்லா ஹஸ்ஸான், பொருளாளராக முஸ்தபா கோவை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில செயற்குழு உறுப்பினர்களாக அப்துல் ஹக்கீம், அமீர் ஹம்சா, பஷீர் சுல்தான், கேகேஎஸ்எம் தெகலான் பாகவி, பாத்திமா கனி, பையாஸ் அஹம்மது, முகம்மது ரஷீத், முஜிபுர் ரஹ்மான், வழ.ராஜா முஹம்மது, ரத்தினம், ஷபிகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக எஸ்.எஸ்.ஏ.கனி, ரியாஸ் ராம்நாடு, சீமான் சிக்கந்தர், தப்ரே ஆலம், முகமது ரபீக், ஜூனைத் அன்சாரி, ராஜா உசேன், அம்ஜத் பாஷா, சலாஹூதீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

The post எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் அறிவிப்பு: தலைவராக மீண்டும் நெல்லை முபாரக் தேர்வு appeared first on Dinakaran.

Tags : STBI Party ,Nellie Mubarak ,President ,CHENNAI ,10th State General Assembly ,STPI party ,State President ,SDPI Party ,Dinakaran ,
× RELATED சம்பலுக்கு செல்ல எதிர்க்கட்சி...