×

நாசரேத்தில் 4 மாத கர்ப்பிணியான பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

நாசரேத்: நாசரேத் மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன் குமார்(37). இவரது மனைவி ஜெர்லின் கோல்டா (35) இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு டி ஜோ(4) என்ற மகன் உள்ளார். தம்பதி இருவரும் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியர்களாக பணியாற்றி வந்த நிலையில் பேராசிரியை ஜெர்லின் கோல்டா தற்போது 4 மாத கர்ப்பமாக இருந்து வந்தார். இதனால் விடுப்பு எடுத்துக்கொண்ட அவர் வீட்டில் இருந்து வந்தார். இதனிடையே தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக அவ்வப்போது தகராறு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனால் விரக்தியடைந்த ஜெர்லின் கோல்டா, பிரவீன்குமார் குளியலறைக்கு சென்ற நேரத்தில் வீட்டின் உள்ள படுக்கை அறையில் சேலையால் தூக்கிட்டு தொங்கினார். பின்னர் இதை பார்த்து பதறிய அவரது கணவர் பிரவீன் குமார், ஜெர்லின் கோல்டாவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெர்லின் கோல்டா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெர்லின் கோல்டாவின் தாய் ஜான்சிராணி, நாசரேத் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாசரேத்தில் 4 மாத கர்ப்பிணியான பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nazareth ,Praveen Kumar ,Nazareth Market Street ,Gerlin Golda ,De Jo ,
× RELATED கொரியர் பெயரில் நடக்கும் நூதன மோசடி