×

எனக்கு எதிரான சதி செய்தால் பிலிப்பைன்ஸ் அதிபரை கொல்வதற்கு ஒப்பந்தம்: துணை அதிபர் சாரா பகிரங்க மிரட்டல்

மணிலா: பிலிப்பைன்சில் அதிபர் பெர்டினான்ட் மார்கோஸ் மற்றும் துணை அதிபர் சாரா டுடெர்டே இடையேயான கருத்து வேறுபாடு மற்றும் விரிசல் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துணை அதிபர் சாரா டுடெர்டே, ‘எனக்கான அவர்களின் சதி வெற்றி பெற்று நான் கொல்லப்பட்டால், அதிபர் மார்கோஸ், அவரது மனைவி மற்றும் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஆகியோரை கொல்வதற்காக கொலையாளி ஒருவரிடம் ஒப்பந்தம் செய்துள்ளேன்”என்றார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அதிபரின் உயிருக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் எப்பொழுதும் தீவிரவமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். மேலும் துணை அதிபரின் இந்த அச்சுறுத்தல் தெளிவான மற்றும் குறிப்பிட்ட சொற்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post எனக்கு எதிரான சதி செய்தால் பிலிப்பைன்ஸ் அதிபரை கொல்வதற்கு ஒப்பந்தம்: துணை அதிபர் சாரா பகிரங்க மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Vice ,Sarah ,MANILA ,Chancellor ,Ferdinand Marcos ,Vice Chancellor ,Sarah Duterte ,Philippines ,President ,
× RELATED தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என...