×

ஹிஸ்புல்லா முகாம்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 11 பேர் பலி

பெய்ரூட்: லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் இருப்பிடங்களை குறி வைத்தும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. நேற்று அதிகாலை மத்திய பெய்ரூட்டின் பாஸ்தா பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் மீது இஸ்ரேல் 5 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் எட்டு மாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. மேலும் ஆளில்லா விமானம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். தெற்கு துறைமுக நகரான டயரில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

The post ஹிஸ்புல்லா முகாம்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 11 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Israel ,Hezbollah ,BEIRUT ,Lebanon ,Basta ,Dinakaran ,
× RELATED முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும்...