×

மாநகராட்சி கைப்பற்றிய கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள்

 

தஞ்சாவூர், நவ. 23: தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகில் டெம்பிள் டவர் ஹோட்டல் உள்ளது. அந்த ஹோட்டல் ஆனது சில மாதங்களாக மாநகராட்சிக்கு கட்ட வேண்டிய வரியை கட்டவில்லை என தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் சீல் வைக்கப்பட்டது. மேலும், அந்த ஹோட்டலில் நுழைவாயிலில், இந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் எனவும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த ஹோட்டலை சரிவர பராமரிக்காததால் சமூக விரோதிகள் அங்கு சென்று மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அந்த ஹோட்டலில் வெளிப்புறங்களில் மது பாட்டில்கள், கப்புகள் குவிந்து கிடைக்கின்றன. மேலும், இரவு நேரத்தில் அங்கு, சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், மது போதையில் வழிபறி சம்பவங்களும் நடைபெறுகிறது. தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட இந்த கட்டிடம் பராமரிப்பின்றி உள்ளதால், சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாநகராட்சி கைப்பற்றிய கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tanjore Ramanathan Roundabout ,Temple Tower Hotel ,Tanjore ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் அருகே அறுவடை செய்யப்பட்ட...