×

கடையத்தில் இலவச மருத்துவ முகாம்

கடையம், நவ.23: கடையம் சேர்வைக்காரன்பட்டி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளை மற்றும் நெல்லை சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் மிஷன் மருத்துவமனை சார்பில் வங்கி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வங்கி மேலாளர் லீமா ரோஸ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில் பொதுமக்கள் 60 பேர் பயன்பெற்றனர். முகாமில் வங்கி பணியாளர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

The post கடையத்தில் இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Kadayam ,Kadayam Servaikaranpatti Tamil Nadu Mercantile Bank ,Nellie ,CSI Jayaraj Annapakyam Mission Hospital ,Leema Rose ,Dinakaran ,
× RELATED கடையம் அருகே சுடுகாட்டுக்கு பாலம்...