×

செங்கல்பட்டில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு தாலுகா காவல் எல்லைக்கு உட்பட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் கஞ்சா அதிகளவு புழக்கத்தில் இருப்பதாக தாலுகா காவல் ஆய்வாளர் நடராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், தாலுகா காவல் உதவி ஆய்வாளர் சதாசிவம் தலையிலான காவலர்கள் செங்கல்பட்டு வல்லம் மேலமையூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதில், வல்லம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது. அக்ஷயா நகரில் உள்ள சாய்பாபா கோயில் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படியான வகையில் மூன்று இளைஞர்கள் நின்றிருந்தனர். அவர்களை மடக்கி விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குபின் முரனாக பதிலளித்ததனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்ததில், கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன், பெருமாள், தினேஷ்குமார் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மூவரையும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post செங்கல்பட்டில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Chengalpat ,Chengalpattu ,Taluka ,Police Inspector ,Natarajan ,Chengalpattu taluk ,
× RELATED ஒரு பீர்பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 ;...