×

பிரதமர் மோடி நாடு திரும்பினார்

புதுடெல்லி: பிரதமர் மோடி கடந்த 17ம் தேதி நைஜீரியா சென்றார். இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு நைஜீரியா சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றார். இந்த பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு நைஜீரியாவின் மிக உயரிய விருதான கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி நைஜர் விருது வழங்கப்பட்டது. நைஜீரியா பயணத்தை முடித்து கொண்டு பிரேசில் நாட்டுக்கு சென்றார். அங்கு ரியோடிஜெனிரோ நகரில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொண்டார். பிரேசில் பயணத்தில் அமெரிக்க அதிபர், பிரிட்டிஷ் பிரதமர், இத்தாலி பிரதமர், பிரான்ஸ் அதிபர், இந்தோனேஷிய பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், கயானா நாட்டுக்கு சென்றார். முதல்நாளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கயானா அதிபர் முகமது இர்பான் அலியை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கயானா நாட்டின் உயரிய விருதான தி ஆர்டர் ஆப் எக்சலன்ஸ் விருதை பிரதமர் மோடிக்கு கயானா அதிபர் முகமது இர்பான் அலி வழங்கி கவுரவித்தார். இந்நிலையில் தன் வௌிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி நேற்று இந்தியா திரும்பினார்.

 

The post பிரதமர் மோடி நாடு திரும்பினார் appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,Nigeria ,Minister ,Grand Commander ,Dinakaran ,
× RELATED மோடியுடன் உரையாட ஜன.14 வரை முன்பதிவு